இன்று ரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட்: வரிகள் எப்படி இருக்கும்?

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (05:59 IST)
கடந்த ஆண்டில் இருந்து ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யாமல் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகை இருக்க வேண்டும் என்று மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் நாட்டின் வளர்ச்சியை நோக்கிய நிதிக்கொள்கையுடன் இந்த பட்ஜெட் இருக்கும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் 8 மாநிலங்களின் தேர்தல் வரவிருப்பதால் இந்த பட்ஜெட் வரிச்சுமையுடன் கூடிய பட்ஜெட்டாக இருக்காது என்று கணிக்கப்படுகிறது.

பாஜக ஆட்சியில் தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவென்பதால் இந்த பட்ஜெட் தேர்தலை கணக்கில் கொண்டே இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர். மேலும் ஜிஎஸ்டிக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. ஜிஎஸ்டியில் ஏற்கனவே பல பொருட்களுக்கு வரி குறைப்பு செய்து வருவதால் இந்த பட்ஜெட்டில் அதிக வரிச்சலுகையை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்