பட்ஜெட் 2018-19: கார்பரேட் வரி குறைக்கப்படுமா??

புதன், 31 ஜனவரி 2018 (15:51 IST)
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
 
இந்தியாவில் தொழில் மற்றும் உற்பத்தி செய்யவும், வெளிநாட்டில் இருந்து புதிய நிறுவனங்களை ஈர்க்கவும், நிறுவனங்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் கார்பரேட் வரியைக் குறைக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

2018-19 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தற்போது இருக்கும் 30 சதவீத கார்பரேட் வரியை 25 சதவீதமாகக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது என தெரிகிறது.  
 
கடந்த 2016 ஆம் நிதியாண்டில் 50 கோடி ரூபாய்க்கும் குறைவாக வருமானத்தை கொண்ட நிறுவனங்களுக்குக் கார்பரேட் வரியை 25% அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏதுவாகக் குறிப்பிட காலத்திற்கு முழுமையான வரி விலக்கும் அறிவிக்கப்பட்டது. இதனால் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. 
 
இருப்பினும் நாளைய பட்ஜெட் தாக்கலில் கார்ப்பரேட் வரி குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்பரேட் வரி குறைக்கப்பட்டால் இந்தியாவில் இருக்கும் சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நன்மை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்