அதானி வழக்கு நாளை விசாரணை! இன்றே சரிந்த அதானி குழும பங்குகள்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (13:29 IST)
அதானி பங்குசந்தை மோசடி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் இன்று அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

இந்திய பணக்காரர்களில் நம்பர் 1 இடத்திலும் உலக பணக்காரர்களில் 3வது இடத்திலும் இருந்த கௌதம் அதானியின் அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

உலக பணக்காரர்களில் 3வது இடத்தில் இருந்த அதானி 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த பங்குசந்தை முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த பொதுநல வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்த அதானி பங்குகள் நேற்று சற்று உயர்வை சந்தித்தன. இந்நிலையில் இன்று மீட்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி எண்டர்ப்ரைசஸ் பங்கு ஒரே நாளில் ரூ.323 சரிந்து ரூ.1834 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதுபோல அதானி போர்ட், அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்