ஒரே ஒரு நாள் ஏற்றத்திற்கு பின் மீண்டும் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

வியாழன், 9 பிப்ரவரி 2023 (09:49 IST)
அதானி விவகாரம் காரணமாக பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் நேற்று சுமார் 300 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்தனர்
 
ஆனால் இன்று மீண்டும் சென்செக்ஸ் சரிவடைந்தது முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன் பங்கு சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 510 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் சார்ந்து 17800 என்ற புள்ளிகளில் வர்த்தக வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்