அதானி விவகாரம் எதிரொலி.. மீண்டும் பங்குச்சந்தை சரிவு..!

திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:38 IST)
அதானி விவகாரம் காரணமாக கடந்த 10 நாட்களாக பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது மட்டும் சிறிதளவு ஏறிய பட்ஜெட் பங்குச்சந்தை அதன்பின் தொடர்ச்சியாக மீண்டும் சரிந்து கொண்டே வருகிறது. 
 
சற்று முன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 445 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 135 புள்ளிகள் சார்ந்து 17,720 என்ற புலிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதானி விவகாரம் இன்னும் பங்குச்சந்தையில் எதிரொலிப்பதாகவும் இதனால் சில காலங்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்