30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒரு நடிகரா? அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (10:11 IST)
30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஒரு குற்றவாளி ஒரு நடிகர் என தெரியவந்துள்ளது போலீசாரை அதிர வைத்துள்ளது. 
 
காசியாபாத் என்ற பகுதியைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி ஓம்பிரகாஷ். 65 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டபோது அவர் கடந்த 30 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்துள்ளார் என்றும் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார் என்பதும் தெரியவந்தது 
 
இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். கொலை கொள்ளை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஓம் பிரகாஷ் இந்த 30 ஆண்டுகளில் நடிகராக இருந்து வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது அதுமட்டுமின்றி ஒரு திரைப்படத்தில் அவர் போலீசாக நடித்து உள்ளது காவல்துறையே அதிர வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்