போலீஸ் ஸ்டேசனில் புகுந்து போலீஸாரை தாக்கிய கும்பல்! அதிர்ச்சி வீடியோ

சனி, 6 ஆகஸ்ட் 2022 (19:39 IST)
டில்லியில் உள்ள காவல்  நிலையத்தில் புகுந்து காவலர்களை சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள ஆனந்த் விஹார் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி புகுந்த சிலர், அங்கு பணியாற்றி வந்த காவலர்களைக் கடுமையாகத் தாக்கினர்.

 அவர்களுடன் அருகில் இருந்தவர்கள் இதைத் தடுக்காமல் தங்களில் செல்போனில் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, போலீஸார் தங்களை அடிக்காதீர்கள் எனக் கூறியும் அதைக் கேட்காமல் கொடூரமாக அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் எதற்கு நடந்தது? ஏன் நடந்தது என்பது பற்றிய தகவல் டெருயவில்லை. இந்த வீடியோ பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்