மருமகனுக்கு கட்சியில் உயர்பதவி… மம்தா மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (08:15 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மருமகன் அபினவ் பானர்ஜிக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திருணாமூல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக ஆட்சியை அமைத்துள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னர் திருணாமூல் காங்கிரஸில் இருந்து பல முன்னணி தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம் ஆகினர். அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது மம்தா வாரிசு அரசியல் செய்கிறார் என்பதுதான்.

இந்நிலையில் அந்த குற்றச்சாட்டை மேலும் வலுவாக்குவது போல தனது அண்ணன் மகனான அபினவ் பானர்ஜிக்கு கட்சியின் உயரிய பதவிகளில் ஒன்றான தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்