அதில் கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிப்பது தொடர்பாக நீங்கள் அறிவித்த அறிவிப்பை விட, உங்களது பாசமிகு தந்தை கருணாநிதிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்திருக்கவே முடியாது. கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது எனக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 94 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன். எனது தந்தை டாக்டர் எச்.எம்.ஹண்டே அங்குதான் டாக்டராக பணியாற்றினார். அதேநேரம் நான் தங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கிறேன். தயவு செய்து இதுபோல ஆபத்தான இடங்களுக்கு செல்லவேண்டாம். உங்களது ஆரோக்கியமே, தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆரோக்கியமாகும். இரவு பகலாக உங்களது அயராத உழைப்பினால் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களுடைய தொடர் வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.