கலப்புத் திருமணம் செய்த வாலிபர் - கண்களை தோண்டி படுகொலை செய்த கொடூரம்

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (15:11 IST)
கேரளாவில் கலப்புத் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் சூரியகவளா பகுதியை சேர்ந்தவர் கெவின்(23). இவர் அதே பகுதியை சேர்ந்தவ நினு (20) என்ற பெண்ணை காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 
 
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்தனர். பின் கெவின் நண்பர் அனிஷ் என்பவருடன் புதுமணத்தம்பதியினர் பேசிக்கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு வந்த நினுவின் அண்ணன் சானுசாக்கோ உள்பட 12 பேர் கெவினை சரமாரியாக தாக்கியதோடு அவரை கடத்திச் சென்றனர். 
 
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க அளிக்க சென்ற நினுவின் மனுவை ஏற்க காவல் துறையினர் 10000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளனர். பலர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதையடுத்து போலீஸார் கெவினை தேடினர்.
இந்நிலையில் நினுவின் அண்ணன் மற்றும் அவனது கூட்டாளிகள் கெவினை படுகொலை செய்து, அவரின் இரு கண்களையும் தோண்டி, அவரது உடலை குட்டையில் வீசிச்சென்றனர். கெவினின் உடலை கைப்பற்றிய போலீஸார், நினுவின் அண்ணன் சானுசாக்கோ, அவரது நண்பர்கள் ரியாஷ், நியாஷ் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்