கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ்க்கு கடந்த 18 நாட்களில் 15பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபா வைரஸின் தாக்குதலால் கேரள மக்கள் மட்டுமின்றி, தமிழக எல்லையோர மாவட்ட மக்களும் பீதியடைந்துள்ளனர்.
மலேசியாவில் இந்த வைரஸ் தாக்கி இடத்தின் பெயரே இந்த வைரஸ். வௌவால் பன்றி போன்ற விலங்குகளின் சிறுநீர் எச்சில் போன்றவை மனிதர்களின் குடிநீர் உணவுப் பொருட்களில் கலக்கும்போது நோய் தாக்கும். இந்த நோயால் கடந்த 3 நாட்களில் கேரளாவில் 15 பேர் பலியாகியுள்ளனர் அதில் 4 பேருக்கு மருத்துவம் செய்த ஒரு செவிலியரும் அடக்கம்.
கேரளாவை ஒட்டி இருக்கும் தமிழ் நாட்டின் எல்லைகள் மூலமாக இந்த நோய் தமிழகத்தை பாதிக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள புளியரையில் பன்றி காய்ச்சல்,பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தாக்குதல்கள் உருவாகாமல் இருக்க சுகாராதத்துறை சார்பில் நோய் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தன.