ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு என்ன செய்ய வேண்டும்?

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (14:28 IST)
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22 ஆம் தேதி நடந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டு போலீஸார் மக்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.


 
இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தமிழக அரசு நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை பிறப்பித்தது. அதன் படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் நேற்று ஆலைக்கு சீல் வைத்தார். 
 
ஸ்டெர்லைட் ஆலையை இதுவரை 3 முறை மூடியும், அந்த ஆலை மீண்டும் செயல்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு, 2013 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாம்.
 
தற்போது, 2018 ஆம் ஆண்டு நான்காம் முறையாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. கடந்த மூன்று முறை ஆலை மூடப்பட்ட போது ஆலை தரப்பு இதனை நீதிமன்றம் வாயிலாக தகர்த்தது. 
 
இது போன்று மீண்டும் நடக்காமல் இருக்க அமைச்சரவையை கூட்டி தமிழக அரசு கொள்கை முடிவாக இதனை அறிவித்திருக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவு என்றால் அதில் நீதிமன்றம் தலையிடாது அல்லது அவசர சட்டம் பிறப்பிக்கபட்டிருக்க வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்