திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? மர்ம நபர் அனுப்பிய இமெயிலால் பரபரப்பு..!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (10:20 IST)
திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மர்ம நபர் ஒருவர் அனுப்பிய இமெயிலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவில் இருக்கும் மலையில் தீவிரவாதிகள் நுழைந்து இருப்பதாகவும் அங்கு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் மர்ம நபர் ஒருவர் போலீசாருக்கு இமெயில் அனுப்பி உள்ளார். 
 
இதனை அடுத்து திருப்பதி மலை முழுவதும் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்தி உள்ளனர் என்பதும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் உள்பட அனைவரும் தீவிர சோதனை வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
அதுமட்டும் இன்றி திருப்பதி மலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பக்தர்கள் எடுத்துச் செல்லும் உடைமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருவதாகவும் திருப்பதியில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்