9 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு..! விரைவில் குற்றப்பத்திரிகை... ! காவல்துறை தகவல்.!!

Senthil Velan
வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:41 IST)
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி காணாமல் போனார். சிறுமியை இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த சாக்கடை கால்வாயில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. 
 
சாக்கடையில் கிடந்த மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  உடற்கூராய்வு அறிக்கையில், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

ALSO READ: மக்களவைத் தேர்தல்..! கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி..!!

கைதான குற்றவாளிகள் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இந்நிலையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்