அதானி மீது அமெரிக்கா அரசு குற்றச்சாட்டு வைத்ததன் காரணமாக, நேற்று பங்குச்சந்தை சரிவை சந்தித்தது. ஆனால், இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்தன. எனினும், மற்ற நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் சரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்றும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்துக்கொண்டும் இருக்கின்றன. அதே நேரத்தில், பிற நிறுவனங்களின் பங்குகள் உயர்வில் இருப்பதால், பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை (BSE) 445 புள்ளிகள் உயர்ந்து, 77,595 என்ற புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை (NSE) நிப்டி 145 புள்ளிகள் உயர்ந்து, 23,049 என்ற புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது.