தற்போது பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தங்கத்தை முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என கேரள நீதிமன்றத்தில் தேவஸ்தானம் உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 227 கிலோ தங்கத்தை முதலீடாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து, மத்திய அரசு கொண்டுவந்துள்ள தங்க முதலீடு திட்டத்தில் டெபாசிட் செய்யலாம் என்றும், அதிலிருந்து கிடைக்கும் வட்டியை தனி கணக்கில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே குருவாயூர் தேவஸ்தானம் தங்க முதலீடு திட்டத்தில் 869 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்து உள்ளது. அதேபோல் சபரிமலை தேவஸ்தானமும் 227 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து கிடைக்கும் வட்டி பணத்தை பக்தர்களின் வசதிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.