ஜாமீனில் வெளிவந்து 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 32 ஆண்டுகள் சிறை தண்டனை..!

Mahendran

வியாழன், 7 மார்ச் 2024 (18:39 IST)
ஏற்கனவே ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறைக்கு சென்ற குற்றவாளி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து அந்த குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 
 
கடந்த 2022 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அஜித் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது 
 
ஆனால் தனக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த அஜித்குமார் மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து மீண்டும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது முதல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஜித்குமாருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்து மற்றொரு சிறுமியை அஜித்குமார் பலாத்காரம் செய்த வழக்கு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்