உபி முதல்வர் யோகி மீது நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (07:18 IST)
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசும்போது முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
 
முஸ்லிம் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் முதல்வரின் பேச்சு அமைந்துள்ளது என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளது இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக upi முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியபோது என்னுடைய ஆட்சி அமைவதற்கு முன்னர் ரேஷன் பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு முறையாக கிடைக்கவில்லை அவர்களுக்கு கிடைக்க வேண்டியதை அப்பாஜான் எனக் கூறும் நபர்கள் தின்று வந்தனர் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்., இந்த அப்பாஜான் என்ற வார்த்தையை குறிப்பிட்டு தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்