ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மலைப்பகுதியில் ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் சுமர் 30 பேர் அங்குள்ள விசாகப்படினத்திற்குச் சுற்றுலாச் செல்லத் திட்டமிட்டனர்.
அதேபோல் விசாகப்பட்டினத்திலுள்ள மலைப்பகுதில் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றுகொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 8 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்., மீதமிருப்பவர்கள் அருகே இருப்பவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இருள் சூழ்ந்திருப்பதால் தீயணைப்புப்படையினர் மீட்பதில் சிரமம் நிலவுகிறது.