இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் ஆக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பதவி வகிக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார் 67 வயதாகும் சந்திரசேகரராவ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி தனது மகன் கே டி ராமராவை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த தகவலை மறுத்த அவர் தெலுங்கானா முதலமைச்சர் ஆக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளதாகவும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அப்படி ஏதேனும் முதலமைச்சர் பதவியில் மாற்றம் தேவை என்றால் எம்எல்ஏக்கள் அனைவரிடமும் தெரிவித்து அதன் பின் முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார்