மே.வங்கத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்: கொரோனா பரவலால் பொதுமக்கள் தயக்கம்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (07:33 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் கேரளா மற்றும் புதுவை ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் முடிவடைந்து விட்டது
 
ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இதுவரை அம்மாநிலத்தில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது
 
இன்று காலை 7 மணிக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் இருப்பினும் ஒரு சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து, திட்டமிட்டபடியே தேர்தலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்