உத்தரப்பிரதேச கும்பமேளாவில் 50,000 பேர் மாயம்! உறவினர்கள் கண்ணீர்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (14:51 IST)
பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக  கும்பமேளா நடந்து வரும்  50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற நகரமான பிரயாக்ராஜ்ஜில் (அலகாபாத்) கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி கும்பமேளா தொடங்கியது.
 
கங்கை நதிக்கரையில் 8 வாரங்கள் நடைபெறும் இந்த இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 15 கோடி பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதற்காக இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர். 
 
மௌனியா அம்மாவசையான நேற்று முன்தினம் கூட்ட  நெரிசலில் சிக்கி  50 ஆயிரம் பேர் வரை காணாமல் போய்விட்டனர். . காணாமல் போனோர் குறித்த அறிவிப்பு பகுதியில் ஏராளமானோர் கதறி அழுதபடி இருந்தனர். 
 
கடந்த முறை நடந்த கும்பமேளாவின் போதும் ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகே குடும்பத்துடன் அவர்கள் சேர்ந்தனர். இந்த ஆண்டு காணாமல் போனவர்களிடம் செல்போன் வசதி இருப்பதால் விரைவில் குடும்பத்தினருடன் சேர்ந்துவிடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்