3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வெடித்த இளைஞர்

வியாழன், 8 நவம்பர் 2018 (14:40 IST)
உத்திரபிரதேசத்தில் 3 வயது சிறுமி ஒருவரின் வாயில் இளைஞர் பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் அங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திரப்பிரதேச மாநிலம், மீரட் நகரில் 3 வயது குழந்தை தீபாவளி பண்டிகை அன்று சாலையில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். 
 
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் சிறுமியை அழைத்து அவரின் வாயில் பட்டாசு வைத்து வெடித்துள்ளார். இதனால் சிறுமியின் வாய் கிழிந்தது. 
 
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் வாயில் 50க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டுள்ளனர். சிறுமியின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாம். 
 
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் வாயில் பட்டாசு வெடித்த அந்த இளைஞரை தேடி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்