கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும்வரும் 14 ஆம்தேதிவரைஊரடங்குஅமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியப் பொருளாதாரம் பெருமளவு நலிவடைந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் குணமடைந்துவருகின்றனர்.
ஏற்கனவே, கொடோனா தடுப்பு நிதிக்காக, டாட்டா நிறுவனம், விப்ரோ நிறுவன, கோடெக் மகெந்திரா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, நடிகர் அக்ஷ்ய்குமார் ஆகியோர் பிரதமர் மோடி கேட்டுக்கொண்ட படி தாராளமான உதவி செய்துள்ளனர். மற்ற நடிகர்கள்,நட்சத்திரங்கள் பலரும் உதவி செய்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அமைச்ச்ரவை கூட்டத்தில், ‘’அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், எம்பிக்கள் அனைவருக்கும் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் நிதி சிக்கன் நடவடிக்கையாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் தெரிவித்துள்ளார்.
அதேபோல், குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், ஆளுநர்களும் 30 சதவீத ஊதியத்தை பிடித்தம் செய்ய தாமாக முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடித்தக்கது.