இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று கொரோனாவிற்கு எதிராக நயன் கேண்டில் ஒளியேற்றிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். தற்போது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் " ''அறிவியல் ரீதியாக பேசும்போது, அதிகப்படியான நெருப்பும் , ஒளியும் காட்டுவதால் வெப்பநிலை அதிகரித்து சில கொரோனா வைரஸை கொன்று விடலாம் என கூறப்படுவது உண்மையா ?'' என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ், நக்கலாக கேட்கிறார்களா? அல்லது சீரியஸான டவுட் அ? என ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.