திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் அபேஸ்...போலீஸ் விசாரணை...

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (13:22 IST)
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்க கிரீடங்கள் தொலைந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சிடைந்தனர்.
திருமலை - திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான  கோவிந்தசாமி கோவிலில் தங்க  கிரீடங்கள் தற்போது காணாமல் போனதாக தகவல் வெளியுள்ளது. 
 
கோவிந்தசாமி கோவிலில்  சாமிக்கு அணிவிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் திடீரென காணாமல் போயுள்ளது. நேற்று இரவு கோவில் கதவுகளை அடைத்த ஊழியர்களிடன் இது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீஸார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்தக் கொள்ளை குறித்து கண்டுபிடித்து காணாமல் போன கிரீடங்களை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்