கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும்.
ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.
விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும். விஷணுவை நான்கு முறையும், லட்சுமி தாயாரை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும். மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும். தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வரவேண்டும்.
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.