வாடகை வீட்டில் வசிப்போருக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் : டெல்லி அரசு அதிரடி

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (17:20 IST)
டெல்லியில், வாடகை வீட்டில் வசிப்போர் இனிமேல், மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது.
 
இந்நிலையில், வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், மக்களைக் கவரும் வகையில் முதல்வர் கெஜ்ரிவால் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
 
ஏற்கனவே, மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என மாநில அரசு அறிவித்ததை அடுத்து, பல்வேறு தரப்பினர் அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், இன்று, கெஜ்ரிவால், வாடகை வீட்டில் வசிப்போருக்கு மாதம் 200 யூனிர் வரை மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது :
 
இந்த திட்டத்தின் சலுகையைப் பெற, வாடகை வீட்டில் வசிப்போர் வாடகை வீட்டில் வசிப்பதற்க்கான ஒப்பந்த நகலை கொடுத்தால் போதும். முக்யமந்திரி கிரெய்தார் பில்ஜி மீட்டர் யோஜனா திட்டத்தில் கீழ் வாடகை வீட்டில் வசிப்போர் மானியம் பெறலாம், மேலும், வாடகை வீட்டில் வசிப்போர் முன்பணம் செலுத்தி மீட்டர்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். 

முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்