குஜராத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு: முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (07:54 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதில் கிட்டத்தட்ட பாதிபேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸால் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன
 
இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி குஜராத் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கை குஜராத் அரசு அறிவித்துள்ளது
 
இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை குஜராத் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்குமென்றும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு இருக்குமென்றும் சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன/ இந்த உத்தரவை குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்