சனி, ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (18:04 IST)
சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு என்றும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு என்றும் மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இந்தியாவில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் கிட்டத்தட்ட 50% மகாராஷ்டிராவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மாநிலம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் டுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சனி ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்குமென்றும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதி என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது