சத்தீஷ்கரில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (19:52 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது 
 
சத்தீஸ்கர் மாநில அரசு இன்று அறிவித்த அறிவிப்பின்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் இதனை அடுத்து இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவர்கள் காவலர்கள் உள்ளிட்ட முக்கியமான நபர்களை தவிர வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் அத்தியாவசியமான தேவைகள் தவிர எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்