கண்ணாமூச்சி விளையாடிய லிப்ட்டில் ஒளிந்த சிறுமி பரிதாப பலி: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (17:40 IST)
கண்ணாமூச்சி விளையாடிய போது 16 வயது சிறுமி லிப்டில் ஒளிந்த போது பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கண்ணாமூச்சி விளையாடிய 16 வயது சிறுமி லிப்டில் ஒளிந்ததாக தெரிகிறது. அப்போது லிப்டில் இருந்து அவர் தலையை வெளியே நீட்டி பார்த்த போது திடீரென லிப்ட் கீழ்நோக்கி வந்ததை அவர்  கவனிக்க்கவில்லை .அதனால்  தலையில் மோதி விபத்து ஏற்பட்டது
 
இதில் காயம் அடைந்த சிறுமி அதன்பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
முதல்கட்ட விசாரணையை அடுத்து வீட்டுவசதி காலனியின் தலைவர் மற்றும் செயலாளரை போலீசார் கைது செய்து விசாரணை செய்துள்ளதாக தெரிகிறது லிட்டில் திறந்தவெளி கண்ணாடி பகுதியை வைத்திருப்பதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இது குறித்து அடிக்கடி புகார் செய்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அந்த பகுதியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்