மீண்டும் சென்செக்ஸ், நிப்டி உயர்வு.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

Siva
செவ்வாய், 16 ஜனவரி 2024 (09:56 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நேற்று திடீரென நேற்று பொங்கல் தினத்தில் பங்குச்சந்தை உயர்ந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 3335 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி மூன்று புள்ளிகள் மட்டும் உயர்ந்த 22001 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இந்த வாரம் இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டு இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் புதிதாக பங்குச்சந்தைகள் முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
இன்றைய பங்கு சந்தையில் பேங்க் பீஸ், ஐடிசி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கரூர் வைசியா வங்கி, கல்யாணி ஜுவல்லர்ஸ், ஐடிசி,  சிப்லா ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்