நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளானதில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் உட்பட இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யன்கொள்ளி பகுதிக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று பயணித்துள்ளது. மலைமீது சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக இருந்த ட்ரான்ஸ்பார்மரில் மோதியது.
இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்த நிலையில் பேருந்தை இயக்கிய டிரைவர் மற்றும் ஒரு பயணி என இருவர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் சிலர் காயம் பட்டிருந்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.