79000க்கும் மேல் உயர்ந்து வரலாற்று சாதனை செய்த சென்செக்ஸ்.. நிப்டி நிலை என்ன?

Siva
வெள்ளி, 28 ஜூன் 2024 (11:39 IST)
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் முதல் முறையாக 79 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து வரலாற்று சாதனை செய்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தில் இருந்து வருகிறது என்றும் குறிப்பாக தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி தொடங்கியவுடன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 79 ஆயிரத்து 500க்கு மேல் இன்று வர்த்தகமாகி வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 24,000க்கும் அதிகமான புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல் உள்பட ஒரு சில பங்குகள் மட்டுமே குறைந்துள்ளதாகவும் மற்ற அனைத்து பங்குகளும் உயர்ந்து காணப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்