வாரம் முழுவதும் முன்னேற்றம்.. உச்சத்திற்கு செல்கிறது பங்குச்சந்தை..!

Siva

வியாழன், 27 ஜூன் 2024 (12:54 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதுமே ஏற்றதில் இருந்து வரும் நிலையில் புதிய உச்சத்திற்கு பங்குச்சந்தை சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த வாரத்தின் மூன்று நாட்களும் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்றும் நான்காவது நாளாக பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.
 
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 214 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 24.022 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி உட்பட ஒரு சில பங்குகளை தவிர மற்ற அனைத்து பங்குகளும் அதிக அளவு உயர்ந்து உள்ளது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்