78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva

புதன், 26 ஜூன் 2024 (12:08 IST)
பங்குச்சந்தை நேற்று காலையில் சரிந்தாலும் மதியத்திற்கு பின் திடீரென உயர்ந்தது என்பதும் 700 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் பாசிட்டிவாக தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 78,470 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 100 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 23 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

பங்குச்சந்தை நேற்றும் இன்றும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்றைய பங்குச்சந்தையில் அதானி போர்ட், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் எச்டிஎப்சி வங்கி , மகேந்திரா அண்ட் மகேந்திரா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்