வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தையில் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

திங்கள், 24 ஜூன் 2024 (11:02 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிந்துள்ளது என்றும் ஆனால் சிறிய அளவில் தான் சரிந்து உள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிந்து 77,124 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 29 புள்ளிகள் சரிந்து 23,472 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச் சந்தை மிக குறைந்த அளவில்தான் சரிந்துள்ளதால் மதியத்திற்கு மேல் பங்கு சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் இன்றைய பங்குச் சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர்,மாருதி சுசுகி, சன் ஃபார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்