4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமில்லை.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (10:44 IST)
கடந்த சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் தங்கம் விலையில் மாற்றம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. 
 
தங்கத்தின் விலை குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை கிராம ஒன்றுக்கு ரூ.6695 என்று விற்பனையான நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை நாள் என்பதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நாள் என்பதாலும் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றும் தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன. 
 
சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றம் இல்லை என்று நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்..
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய்   6,695 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை  ரூபாய் 53,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,150 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 93.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  93,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது

ALSO READ: வார்த்தைகளை அளந்து பேசுங்கள், வேடிக்கை பார்க்க மாட்டோம்: அதிமுகவுக்கு பாஜக எச்சரிக்கை..!
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்