3வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. நஷ்டத்தில் இருந்து மீண்டெழும் முதலீட்டாளர்கள்..!

Siva
வெள்ளி, 7 மார்ச் 2025 (11:24 IST)
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, பங்குச்சந்தை மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் பங்குச்சந்தை சற்று உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்துள்ளது. இதனால் நஷ்டத்தில் இருந்து முதலீட்டாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இன்றைய பங்குச்சந்தையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயர்ந்து, 74,540 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதைப் போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 74 புள்ளிகள் உயர்ந்து, 22,619 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், இன்றைய பங்குச்சந்தையில் டாட்டா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாட்டா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் வங்கி, சன் பார்மா ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், டி.சி.எஸ், கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, ஆசியன் பெயிண்ட், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, டைட்டான், ஹிந்துஸ்தான் லீவர், எச்.சி.எல் டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்