கடந்த சில வாரங்களாகவே பங்குச் சந்தை ஏற்ற-இறக்கத்துடன் இருந்தாலும், மிக அதிகமாக சரிந்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 10,000 புள்ளிகள் சரிந்து உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், இன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே பாசிட்டிவாக இருந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயர்ந்து 73,590 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 207 புள்ளிகள் உயர்ந்து 22,290 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா வங்கி, பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, டிசிஎஸ், ஏஷியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி, டைட்டன், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.