சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உரையாற்றிய போது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதைக்காக இந்த அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், அதேபோல் பெண் குழந்தைகளை கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறினார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறிய போது, தவறான வழிகளில் மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று ஏற்கனவே சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி, சட்ட ரீதியில் இந்த குற்றத்திற்கு தூக்கு தண்டனை வழங்குவது சாத்தியம் அல்ல என்றும், முதல்வர் தனது ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.