வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (09:55 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உச்சத்துக்கு சென்று கொண்டிருந்தது என்பதும் சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டி சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று திடீரென சென்செக்ஸ் மட்டும் நிப்டி சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியபோது 400 புள்ளிகள் வரை சரிந்த நிலையில் தற்போது அது படிப்படியாக உயர்ந்து 50 புள்ளிகள் மட்டுமே சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 62110 எனவும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 18476 எனவும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் பங்கு சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்