சென்செக்ஸ் இன்று உச்சகட்டம்: 1000 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (10:18 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென பங்குச் சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
ஆனால் இன்று ஆரம்பத்திலேயே பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 625 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 185 புள்ளிகள் உயர்ந்து 18314 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று ஒரே நாளில் சுமார் 1000 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்