பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (09:49 IST)
பங்குச் சந்தை இன்றும் மீண்டும் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பங்குச்சந்தை நேற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் 100 புள்ளிகள் வரை சரிந்து பின்னர் சற்று உயர்ந்த நிலையில் திடீரென 200 புள்ளிகள் வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 25 புள்ளிகள் குறைந்து 60 ஆயிரத்து 833 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து 18113 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்த அளவே சரிந்துள்ளதால் மீண்டும் எழுச்சி பெறும் என்று கூறப்படுகிறது

edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்