மீண்டும் உயர்கிறது பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (10:39 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை ஏற்றமாக இருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை 65 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 63 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய வாக்குச் சென்ற 26 புள்ளிகள் உயர்ந்து 19033 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
பங்குச்சந்தை இந்த வாரம் தொடர்ச்சியாக இரண்டு நாள் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் கவனமுடன் வர்த்தகம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்