2வது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (09:51 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளில் சுமார் 400 புள்ளிகளில் வரை உயர்ந்த நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தை உயர்ந்தது மட்டுமின்றி 63 ஆயிரத்தை சென்செக்ஸ் நெருங்கி வருவதால் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கிடைத்து உள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 62962 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை 35 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 635 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் உயர்ந்து வருவதும் சென்செக்ஸ் 63 ஆயிரத்தை  நெருங்கி வருவதும் முதலீட்டாளர்கள் பாசிட்டிவாக பார்த்து வருகின்றனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்