தமிழக சட்டமன்றத்தில் இன்று கச்சத்தீவு தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், இது ஒரு நாடகம் என்றும், நான்கு வருடமாக தீர்மானம் இயற்றாமல், தேர்தல் நேரத்தில் மட்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இதனை அடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை என்றும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் மீனவர்கள் சோதனைக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
முந்தைய திமுக ஆட்சியின் காலத்திலேயே மத்தியில் ஐந்து பிரதமர் ஆண்டிருந்தபோதும் கச்சத்தீவு குறித்து எந்த தீர்மானமும் ஏற்கப்படவில்லை, அதனை அவர்கள் வலியுறுத்தவும் செய்யவில்லை. தற்போது, தேர்தலை மனதில் கொண்டு இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.