இரண்டாவது நாளாக மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. அதானி குழும பங்குகள் உச்சம்..!

செவ்வாய், 23 மே 2023 (10:08 IST)
இந்திய பங்குச் சந்தை நேற்று உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஹிண்டர்பர்க்  நிறுவனம் அதானி குழும நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்திய நிலையில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என இந்த வழக்கை ஆய்வு செய்த குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. 
 
இதனை அடுத்து நேற்று அதானி குழுமங்களின் பங்குகள் உயர்ந்ததால் அந்த குழுமங்களின் நிறுவனங்களுக்கு 10 லட்சம் கோடி லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது. மும்பை பங்கு சந்தை நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 62,178 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி என்பது 80 புள்ளிகள் உயர்ந்து 18,394 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்