69 வயதாகும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, காய்ச்சல் மற்றும் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம், பாகிஸ்தான் அதிபர் ரம்ஜான் தொழுகை நடத்துவதற்காக சென்றதாகவும், அதன் பின்னர் தனது கட்சி தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதிபரின் உடல்நிலை குறித்து பிரதமர் ஷரீப் தொலைபேசியில் கேட்டறிந்ததாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.